WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Tuesday, August 20, 2013

11ஆல் பெருக்குதல் - இரு இலக்க எண்கள்


11ஆல் பெருக்குதல் - இரு இலக்க எண்கள்

 
மின்னல் கணிதம்னு சொல்றீங்களே... உண்மையிலேயே மின்னல் வேகத்தில் போட முடியுமா?
சந்தேகப்படறதை விட்டுட்டு அடுத்த வரியை கவனிங்க.

62 x 11 = ?

·       வலது இலக்கம் 2. இடது இலக்கம் 6

·       வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 2 + 6 = 8

·       விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 6 8 2

என்னது விடை வந்திருச்சா? அப்படின்னு ஆச்சரியப்படாதீங்க. வேணும்னா கால்குலேட்டரை எடுத்து செக் பண்ணிப் பாருங்க. ஆச்சரியம் அதிகமாகணும்னா அடுத்த உதாரணத்தையும் பாருங்க.

81 x 11 = ?

·       வலது இலக்கம் 1. இடது இலக்கம் 8

·       வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 8 + 1 = 9

·       விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 8 9 1

என்னடா இது விரல் சொடுக்கறதுக்குள்ள விடை வருதேன்னு ஆச்சரியமா இருக்கா. இன்னும் பல ஆச்சரியங்கள் உங்களுக்கு இருக்கு. அதுக்கு முன்னாடி இன்னொரு உதாரணம்.

54 x 11 = ?

·       வலது இலக்கம் 4. இடது இலக்கம் 5

·       வலது இலக்கம் + இடது இலக்கம் இரண்டையும் கூட்டுங்கள் 4 + 5 = 9

·       விடையை இடது வலது இலக்கங்களுக்கு இடையே எழுதுங்கள் 5 9 4

நொடிகளில் விடை, இதுதான் மின்னல் கணிதம். உதாரணங்கள் போதும்னு நினைக்கிறேன். இனிமே நீங்களே முயற்சி பண்ணுங்க

13 x 11 = ?
26 x 11 = ?
35 x 11 = ?
44 x 11 = ?
53 x 11 = ?
62 x 11 = ?
70 x 11 = ?
52 x 11 = ?
61 x 11 = ?
36 x 11 = ?
25 x 11 = ?
17 x 11 = ?

இந்த கணக்குகளை எல்லாம் நான் மேலே சொல்லியிருக்கிற முறைப்படி செய்து பாருங்க. நொடியில விடை சொல்லி மத்தவங்களையும் ஆச்சரியப்படுத்துங்க.

முக்கிய பின்குறிப்பு : சில எண்களின் இடது வலது இலக்கங்களை கூட்டினால் பத்து அல்லது அதை விட பெரியதாக இருக்கும். உதாரணமாக 28, 29, 39, 46 . . . . அந்த எண்களை 11ஆல் பெருக்க வேறு ஒரு உத்தி இருக்கிறது. அதை பின்னர் சொல்கிறேன்.

உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......

No comments: