WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Tuesday, August 20, 2013

50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?

50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?


50 என்பது 100/2
இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான்.
அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?

உதாரணம் -1
63
67 X
--------
4221
--------

குறிப்பு :-

1.    அடிப்படை எண் 50

2.    இரு எண்களுமே 50 விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50 கழிக்கப்போகின்றோம்

·       அடிப்படை எண் 50

·       63லிருந்து 50 கழித்தால் +13

·       67லிருந்து 50 கழித்தால் +17

·       13ஐயும் 17ஐயும் பெருக்கினால்
விடை 13X17 = 221.
இது விடையின் முதல் பகுதி.

·       63டன் 17 கூட்டினால் 63+17 = 80.
அல்லது
67
டன் 13 கூட்டினால் 67+13 = 80.

·       80 100ஆல் பெருக்குங்கள்.
80 x 100 = 8000

·       2ஆல் வகுங்கள்.
8000 / 2 = 4000
இது விடையின் இரண்டாம் பகுதி

·       இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4000 + 221 = 4221
இதுதான் விடை

உதாரணம் - 2
65
69 X
--------
4485
--------

1.    அடிப்படை எண் 50

2.    இரு எண்களுமே 50 விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50 கழிக்கப்போகின்றோம்

·       அடிப்படை எண் 50

·       65லிருந்து 50 கழித்தால் +15

·       69லிருந்து 50 கழித்தால் +19

·       15ஐயும் 19ஐயும் பெருக்கினால்
விடை 15X19 = 285.
இது விடையின் முதல் பகுதி.

·       65டன் 19 கூட்டினால் 65+19 = 84.
அல்லது
69
டன் 15 கூட்டினால் 69+15 = 84.

·       84 100ஆல் பெருக்குங்கள்.
84 x 100 = 8400

·       2ஆல் வகுங்கள்.
8400 / 2 = 4200
இது விடையின் இரண்டாம் பகுதி

·       இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4200 + 285 = 4485
இதுதான் விடை


உதாரணம் - 3
42
48X
--------
2016
--------

1.    அடிப்படை எண் 50

2.    இரு எண்களுமே 50 விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்

·       அடிப்படை எண் 50

·       50லிருந்து 42 கழித்தால் 8

·       50லிருந்து 48 கழித்தால் 2

·       8ஐயும் 2ஐயும் பெருக்கினால்
விடை 8X2 = 16.
இது விடையின் முதல் பகுதி.

·       42லிருந்து 2 கழித்தால் 42-2 = 40.
அல்லது
48
லிருந்து 2 கழித்தால் 48-8 = 40.

·       40 100ஆல் பெருக்குங்கள்.
40 x 100 = 4000

·       2ஆல் வகுங்கள்.
4000 / 2 = 2000
இது விடையின் இரண்டாம் பகுதி

·       இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2000 + 16 = 2016
இதுதான் விடை


உதாரணம் - 4
44
49X
--------
2156
--------

1.    அடிப்படை எண் 50

2.    இரு எண்களுமே 50 விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்

·       அடிப்படை எண் 50

·       50லிருந்து 44 கழித்தால் 6

·       50லிருந்து 49 கழித்தால் 1

·       6ஐயும் 1ஐயும் பெருக்கினால்
விடை 6 X 1 = 6.
இது விடையின் முதல் பகுதி.

·       44லிருந்து 1 கழித்தால் 44 - 1 = 43.
அல்லது
49
லிருந்து 6 கழித்தால் 49 - 6 = 43.

·       43 100ஆல் பெருக்குங்கள்.
43 x 100 = 4300

·       2ஆல் வகுங்கள்.
4300 / 2 = 2150
இது விடையின் இரண்டாம் பகுதி

·       இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2150 + 6 = 2156
இதுதான் விடை


உதாரணம் - 5
59
48X
--------
2832
--------

1.    அடிப்படை எண் 50

2.    59 என்பது அடிப்படை எண் 50 விட பெரிய எண்.
எனவே 59 - 50 = 9
48
என்பது அடிப்படை எண் 50 விட சிறிய எண்
எனவே 48 - 50 = - 2

·       அடிப்படை எண் 50

·       59லிருந்து 50 கழித்தால் 9

·       48லிருந்து 50 கழித்தால் -2

·       9ஐயும் -2வையும் பெருக்கினால்
விடை 9 X -2 = -18.
இது விடையின் முதல் பகுதி.

·       48டன் 9 கூட்டினால் 48 + 9 = 57.
அல்லது
59
டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57.

·       57 100ஆல் பெருக்குங்கள்.
57 x 100 = 5700

·       2ஆல் வகுங்கள்.
5700 / 2 = 2850
இது விடையின் இரண்டாம் பகுதி

·       இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2850 + (-18) = 2832
இதுதான் விடை

குறிப்பு :

·       மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் அது மைனஸ் ஆகிவிடும்.
உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832

முயற்சி செய்து பாருங்கள் :
63 x 52 = ?
48 x 53 = ?
61 x 47 = ?
54 x 66 = ?
69 x 43 = ?
56 x 46 = ?


உங்களது மேலான கருத்துக்களை எனக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள No Comments or Post a comment என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் - என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......