WELCOME TO ALL

எனது வளைதளத்தை பார்க்கும் பார்வையாளர் நண்பர்கள் இவ்வளைதளம் மேலும் சிறப்படைய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் என்றும் உங்கள் சரவணன்.......


Pay Roll 9.0 New Software

New Web epayroll System : All Type of Links and downloadable pdf files http://www.epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx http://218.248.29.6/cta/Login/PayrollLogin.aspx
Pay Roll 9.0 - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.
Pay Roll 9.1 (100% acceptable update epay file) - ஐ பதிவிரக்கம் செய்ய Download Link என்பதை சொடுக்கவும்.

Sunday, September 09, 2012

எளியமையாக CCE Grade கண்டுபிடிக்க ஒரு Excell Sheet


எளிய முறையில் CCE  மதிப்பெண்களை  Grade ஆக மாற்ற ஒரு Excell Sheet
 

சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)

        தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation முறையை பின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டு மதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன் படுத்தலாம்.

=SUM(LARGE(C13:F13,{1,2}))

        அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-ஐ கீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.

சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula) சேர்க்கலாம்.

முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.

 

Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல் Column மதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Column அதனுடைய தொடர்புடைய Grade -ஐ குறிக்கும். இந்த rangeல் மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண் வரையில் முடியும்.
 
எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell-ஐ கிளிக் செய்யவும்.

Edit formula வை click செய்யவும்.

Name box Drop down list – இல் click செய்யவும். பிறகு Lookup ஐ தேர்ந்தெடுக்கவும்.



Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டிய செல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல் Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

 
Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.

 
Result_vector ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த lookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMN முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.

இப்பொழுது Formula bar click செய்யவும் அதில் =LOOKUP(M13,T:T,U:U) என்று Formula தோன்றும். இந்த வரிசையில் Formula-ஐ இழுக்கவும். Column இன் கடைசிவரை இழுத்தால் கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும் தோன்றும்.
 

File Menu-வில் Save –Click செய்யவும்.

 
அன்பார்ந்த ஆசிரியர்களே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தை தயாரித்து கீழ் கண்ட இணைப்பில் CCE_GRADE.rar என்ற கோப்பை இணைத்துள்ளேன் அதை Download செய்து Extract செய்து பயன்படுத்தி பாருங்கள்.
DOWNLOAD செய்ய CCE_GRADE ஐ CLICK செய்யவும்.



உங்களது மேலான கருத்துக்களை எனக்கு comments என்பதை கிலிக் செய்து எழுதுங்கள் -
 என்றும் அன்புடன் உங்கள் சு. சரவணன்......

No comments: