விரலில் கற்கலாம் பெருக்கல் கணக்கை
6 முதல் 9 முடிய உள்ள வாய்பாட்டை கை விரலாலே கற்கலாம். இதோ ஒரு உதாரணம். பார்த்து நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
இப்போது பாருங்கள் உங்கள் கையில் மொத்தம் 5 விரல்களை நீட்டி வைத்திருப்பீர்கள். அவற்றை 5 பத்துகள் எனக் கொள்ள வேண்டும்.
6 முதல் 9 முடிய உள்ள வாய்பாட்டை கை விரலாலே கற்கலாம். இதோ ஒரு உதாரணம். பார்த்து நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
இந்த கணக்கை செய்யும் முன் நாம் விரல்களுக்கு வாய்பாட்டுப் பெயர் வைக்க வேண்டும் அவை
1. சுண்டு விரல் - 6 ஆம் வாய்பாடாகக் கொள்க. இதுபோலவே மற்ற விரல்கள்
2. மோதிர விரல் - 7 ஆம் வாய்பாடு
3. நடு விரல் - 8 ஆம் வாய்பாடு
4. ஆல்காட்டி விரல் - 9 ஆம் வாய்பாடு
இப்போது கணக்கு செய்யும் முறையை பார்போம்.
எ.கா - 1 ------------ 6 X 9 = 54
இந்த கணக்கை செய்ய ஒரு கையில் 6 -க்கான ஒரு விரல் மட்டும் விடவும். மற்றொரு கையில் 6 முதல் 9 வரை 4 விரல்களையும் விடவும்.
இப்போது பாருங்கள் உங்கள் கையில் மொத்தம் 5 விரல்களை நீட்டி வைத்திருப்பீர்கள். அவற்றை 5 பத்துகள் எனக் கொள்ள வேண்டும்.
பின்பு உங்கள் இரு கைகளில் ஒரு கையில் கட்டைவிரலுடன் சேர்த்து 4 விரலும், மற்றொரு கையில் 1 விரலும் மடிந்திருப்பதைக் காண்பீர்கள் இவைகளை அப்படியே 4 X 1 = 4 எனப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
1. நீண்டிருந்த விரல்கள் 5 பத்துகள் = 50 இதனுடன்
2. பெருக்கிய தொகை 4 X 1 = 4 இவற்றை கூட்ட மொத்தம் 54
இதுபோல செய்து பாருங்களேன் எளிமை எனப் புரியும்.
1 comment:
என்னவளே
விரல்களை மடக்கி மடக்கி
கணக்கு படிக்க கூப்பிட்டால்
உடைந்துவிடும் என்கிறாய்!
அடடா
பெண்களின் விரல்களை
வெண்டைகாய்க்கு வைத்தது
எவ்வளவு பொறுத்தம்!
Post a Comment